குருசடி ஆலய மக்கள் ஆர்ப்பாட்டம்
காலி செய்ய கூறி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை கோரி குருசடி ஆலய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
குன்னூர்,
குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதியில் 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த குருசடி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அப்பகுதி மக்கள் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆலயத்தை சிலர் வாங்கி விட்டதாக கூறி, இடத்தை காலி செய்ய வற்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து மக்கள் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்தநிலையில் நேற்று குருசடி ஆலய மக்கள் ஆலயத்தை காலி செய்ய கூறி மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பதாகைகளை ஏந்தி ஆலய பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story