தொழிலாளர் தின கிராமசபை கூட்டம்


தொழிலாளர் தின கிராமசபை கூட்டம்
x

மாவட்டத்தில் தொழிலாளர் தின கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கிராம சபை கூட்டம்

கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியை சேர்ந்த மெய்க்குடிப் பட்டி கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதாராமு முன்னிலை வகித்து பேசினார். அப்போது அங்கு வந்த பெண்களிடம் முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் அனைத்து இல்லங்களிலும் கழிவறைகள் அமைத்து அதை பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் குறித்து கேட்டார். அப்போது, கழிவறைகளுக்கும் முறையாக தண்ணீர் கிடைப்பது சிரமமாக இருப்பதாக அங்கு கூடியிருந்த பெண்கள் கூறினார்கள். உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது மழை பெய்தது. பின்னர் மழையின் காரணமாக உங்களோடு பேசுவது தடை ஏற்பட்டுள்ளது. இதனால் உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்குமாறு கலெக்டர் கூறினார். மேலும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

அன்னவாசல், பொன்னமராவதி

அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி, நார்த்தாமலை, புல்வயல், இருந்திரப்பட்டி, சத்தியமங்கலம், அம்மாசத்திரம் உள்பட 43 ஊராட்சிகளில் தொழிலாளர் தின கிராமசபை கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஒப்புதல் பெறப்பட்டது.

பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளிலும் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


Next Story