விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

அய்யம்பேட்டை அருகே திருமணமான 4 மாதங்களில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை;

அய்யம்பேட்டை கே.ஏ.பி. நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது28). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. ஸ்ரீதர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை மரத்தில் ஏறும் போது அதில் இருந்து தவறி விழுந்து உடல் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஸ்ரீதர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீதர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story