ஆய்வகம் கட்டும் பணி மந்தம்
ஆய்வகம் கட்டும் பணி மந்தம்
திருப்பூர்
பெருமாநல்லூர்
பெருமாநல்லூரில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெறுகிறார்கள். ரத்த பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ரத்த மாதிரிகளை கொண்டு வரும் சூழ்நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு ரூ.50 லட்சம் மதிப்பில் பொது சுகாதார ஆய்வகம் மருத்துவமனையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆய்வகப் பணி கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் உள்ளது. கட்டுமான பொருட்கள் செங்கல், மணல், கம்பிகள் ஆகியவை வீணாகிறது. எனவே கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story