நெல்லிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை பார்த்த தொழிலாளி கைது
நெல்லிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை பார்த்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கடலூர்
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அருகே உள்ள சரவணபுரம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு தோட்டத்தில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் தொழிலாளி குரு (வயது 42) என்பவர், அந்த இளம்பெண் குளித்ததை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து திடுக்கிட்ட அந்த இளம்பெண், குருவை தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குரு தனது மனைவி ராணியுடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம்பெண், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ராணி உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து குருவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story