கிருஷ்ணகிரி அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது


கிருஷ்ணகிரி அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
x

கிருஷ்ணகிரி அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தாலுகா மாதேப்பட்டியை சேர்ந்தவர் கண்ணாயிரம், தொழிலாளி. இவருடைய மனைவி கோவிந்தம்மா (வயது 48). இவர் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். இதற்கு கண்ணாயிரம் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கோவிந்தம்மாவை கண்ணாயிரம் தாக்கினார். இதில் காயம் அடைந்த கோவிந்தம்மா சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கோவிந்தம்மாவின் சகோதரி வள்ளி கொடுத்த புகாரின்பேரில், தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணாயிரத்தை கைது செய்தனர்.


Next Story