மனைவியின் கள்ளக்காதலனை அரிவாள்மனையால் வெட்டிய தொழிலாளி கைது; 3 பேருக்கு வலைவீச்சு


மனைவியின் கள்ளக்காதலனை அரிவாள்மனையால் வெட்டிய தொழிலாளி கைது;  3 பேருக்கு வலைவீச்சு
x

ஈரோட்டில் மனைவியின் கள்ளக்காதலனை அரிவாள்மனையால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோட்டில் மனைவியின் கள்ளக்காதலனை அரிவாள்மனையால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்காதல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் எண்ணமங்கலம் கோவிலூரை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நல்லம்மாள் (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பரசனுக்கும், நல்லம்மாளுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

பவானி காலிங்கராயன்பாளையம் தெற்கு வீதியை சேர்ந்த விஜயதேவன் (32) என்பவருக்கும், நல்லம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விஜயதேவனுக்கும், நல்லம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பிறகு விஜயதேவனை பிரிந்த நல்லம்மாள் தனது கணவர் சிலம்பரசனுடன் ஈரோடு ப.தண்ணீர் பந்தல்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

கைது

இந்த நிலையில் விஜயதேவன், நல்லம்மாளை தன்னுடன் வருமாறு கேட்டு தொந்தரவு கொடுத்தார். இதனால் சிலம்பரசன் மற்றும் உறவினர்கள் 3 பேர் கடந்த 13-ந் தேதி விஜயதேவனை வீட்டுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், சிலம்பரசன் வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து விஜயதேவனை வெட்டினார். மேலும், அவரது உறவினர்கள் 3 பேரும் விஜயதேவனை இரும்பு கம்பியால் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த விஜயதேவன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறாா்கள்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story