கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்(வயது 43). விவசாய கூலி தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் செட்டிகுழியில் இருந்து கோவிலூர் செல்லும் சாலையில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் அருகே மரத்தடியில் அமர்ந்து பருத்தி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story