அரசு விரைவு பஸ் மோதி தொழிலாளி பலி


அரசு விரைவு பஸ் மோதி தொழிலாளி பலி
x

சந்தவாசல் அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு விரைவு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு விரைவு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.

சந்தவாசல் அருகே உள்ள பால்வார்த்துவென்றான் கிராமத்தில் வசிக்கும் ராதா மகன் யோகராஜ் (வயது 38). விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட வேலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு வந்தார்.

அங்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வெளியே வந்தார். அப்போது அவ்வழியே திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பஸ்சுக்கு அடியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக்கொண்டது.

இது சம்பந்தமாக யோகராஜ் மனைவி சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து யோகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story