லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x

செய்யாறு அருகே நின்றிருந்த டிப்பர் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். பிணத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அருகே நின்றிருந்த டிப்பர் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். பிணத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளி பலி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி (வயது 35), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தீபா (28), சிப்காட்டில் வேலை செய்து வருகிறார்.

வேலைக்கு சென்ற மனைவியை அழைத்து வர ராஜி நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொணடிருந்தார். செய்யாறு அருகே பாண்டியம்பாக்கம் சாலையில் சென்றபோது நின்றிருந்த டிப்பர் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் ராஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போராட்டம்

இதையறிந்த ராஜியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சோகத்துடன் திரண்டனர்.

இப்பகுதியில் செயல்படும் கல்குவாரியால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், உயிரிழப்பிற்கு காரணமாக உள்ள குவாரியை மூடும் வரை இறந்தவர் உடலை எடுக்க விடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்த லாரியின் கண்ணாடியை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்திகேயன் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அப்போது இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரணம் பெற்று தருவதாகவும், அப்பகுதி கல்குவாரியால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து 7 மணிநேர போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story