மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலியானார்.

திருவண்ணாமலை

ஆரணி

மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலியானார்.

ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவர் மளிகை கடையில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

ஆரணி - செய்யாறு நெடுஞ்சாலையில் பையூர் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் விஜயகுமார் மீது மோதி விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த விஜயகுமாரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், டாக்டர்கள் பரிசோதித்ததில் விஜயகுமார் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் விஜயகுமாரின் மனைவி தனலட்சுமி கொடுத்த புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார். இறந்த விஜயகுமாருக்கு 2 மகன்கள் உள்ளனர்.


Next Story