சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கரூர்

பாலியல் தொல்லை

கரூர் தாந்தோணிமலை, முத்தலாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 58). கூலி தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு தெருவில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை வீட்டிற்குள் தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் சிறுமிக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் பற்றி தங்கவேல் குடிபோதையில் தெருவிற்குள் பேசியுள்ளார். இந்த தகவல் கரூர் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல அலுவலர்கள் சென்று சிறுமியின் வீட்டில் விசாரணை செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனா். அதன்ேபரில் போலீசார் தங்கவேல் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

20 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் ரூ.ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், போச்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் ரூ.ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் ரூ.ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏககாலத்தில் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் தங்கவேல் அதிகபட்ச தண்டனை 20 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவிப்பார்.


Next Story