3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
செய்யாறு அருகே 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
செய்யாறு அருகே 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாலியல் பலாத்காரம்
செய்யாறு தாலுகா மரியநல்லூர் கிராமம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புண்ணியகோட்டி (வயது 40), தொழிலாளி. மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி 3 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புண்ணியக்கோட்டியை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகள் தொடர்பான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
5 ஆண்டு சிறை
இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.
அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புண்ணியகோட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.