ஓமலூர் அருகே பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த தொழிலாளி கைது


ஓமலூர் அருகே  பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த தொழிலாளி கைது
x

ஓமலூர் அருகே பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

சேலம்

ஓமலூர்,

தொழிலாளி

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 30), கூலித்தொழிலாளி.

இவருடைய மாமனார் வீடு டேனிஷ்பேட்டை காஞ்சி காலனியில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மாமனார் வீட்டுக்கு சுரேஷ்குமார் சென்றுள்ளார். அன்று அதே பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் வீட்டின் பின்புறம் குளித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

வீடியோ எடுத்தார்

இதை சுரேஷ்குமார் மறைந்திருந்து செல்போனில் வீடிேயா எடுத்துள்ளார். இதை எதேச்சையாக பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தார். இந்த சம்பவம் ஓமலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story