ஊத்துக்குளி அருகே மேன்றக்கரை குட்டையை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
ஊத்துக்குளி அருகே மேன்றக்கரை குட்டையை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி அருகே மேன்றக்கரை குட்டையை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
குட்டை ஏரி
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கஸ்தூரிபாளையம், செங்காளிபாளையம் ஊராட்சி பகுதியில் மேன்றக்கரை குட்டை ஏரி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பழனிகவுண்டம்பாளையம், செஞ்சேரியம்பாளையம், மேன்றக்கரை, அண்ணா நகர், அருவங்காட்டுபாளையம், சாமியார் பாளையம், சாம்ராஜ்பாளையம், செங்காளி பாளையம் கிராமங்களில் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். மழைக்காலங்களில் குட்டை நிரம்பி வழிந்தால் விவசாயத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் குட்டையாகவும் உள்ளது. இந்த குட்டையை அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் இணைத்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு
இக்குட்டை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேலானை குட்டை தூர்வாருதல் மற்றும் சுவர் கட்டுதல் திட்டத்தின் கீழ் ஒரு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஏரி அமைக்கப்பட்டது. இக்குட்டையின் வடக்கு பகுதி ஏரியை தனியார் சிலர் சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என ஊத்துக்குளி தாசில்தார் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இக்கரையை ஒட்டியுள்ள தனியார் இடத்தினர் கரையின் 10 அடி உயரம் உள்ள ஏரியை சேதப்படுத்தி லாரி மற்றும் எந்திரங்களின் உதவியுடன் மண் அள்ளுவதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதாகவும் கூறினர்.
இது குறித்து இன்று (திங்கட்கிழமை) கலெக்டரிடம் புகார் மனு அளிப்பதாகவும் ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.