அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனை


அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனை
x

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனை

திருப்பூர்

அவினாசி

அவினாசி அரசு மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

அரசு மருத்துவமனை

திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா அலுவலகம் அருகில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஈசி.ஜி.எக்ஸ்ரே, காசநோய், அவசர சிகிச்சை, மகப்பேறு, பொதுமருத்துவம் உள்நோயாளிகள், சித்தமருத்துவம், பிரேத பரிசோதனை என பல பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளை சேர்ந்த ஏழை- எளியமக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டல் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். இங்கு போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பழுதான ஜெனரேட்டர்

ரத்த அழுத்தம்-சர்க்கரை நோய், சளி, இருமல், காய்ச்சல், என தினசரி காலை 7 மணி முதல் நூற்றுகணக்கானோர் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் இருப்பதில்லை. மின்தடை ஏற்படும் சமயங்களில் பயன்படுத்த உள்ள ஜெனரேட்டர் பழுதடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ளது.

இதனால் பரிசோதனைக்கு வருபவர்கள் தனியார் ஆய்வகத்திற்கு செல்லவேண்டியுள்ளது. மருத்துமனை வளாகத்தில் போதுமான மின்விளக்குகள் இல்லை. 2 துப்புரவு தொழிலாளர்கள் மட்டுமே இருப்பதால் துப்புரவுப்பணிகள் சரிவர நடப்பதில்லை. இரவு நேரங்களில் பிரசவம் பார்க்க வரும் கர்ப்பிணிகள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் உபயதாரரால் சுடுதண்ணீர் மற்றும் குளிர்ந்த குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கப்பட்டுள்ளது.

அடிக்கடி சாலை விபத்துகள்

இது பழுதடைந்து தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. அவினாசி நகரம் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் சிகிச்சைக்காக இங்கு கொண்டு வரப்படுகிறார்கள் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க இரவு நேரங்களில் மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திேலயே தங்கியிருக்கவும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார்நிலையில் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவினாசி எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். ஆனால் அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் பணிபுரிய நிரந்தர பணியாளர்கள் இல்லாததால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பிரேத பரிசோதனை கூடத்தில் 24 மணி நேரமும் நிரந்தர பணியாளர்கள் இருக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story