அஞ்செட்டி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி விழுந்து பெண் காயம்


அஞ்செட்டி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி விழுந்து பெண் காயம்
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமமூர்த்தி. இவருடைய மனைவி போதாமணி (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 1-ந் தேதி அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 2-ந் தேதி மாலை பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர் பிரசவ வார்டில் குழந்தையுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் இருந்த படுக்கைக்கு மேல் உள்ள மின்விசிறி திடீரென கழன்று விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக குழந்தை தப்பியது. இதையடுத்து போதாமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story