தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு


தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
x

தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள கே.வி.பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (40). இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் சிவகுமார் அங்கிருந்து வெளிேய சென்று விட்டார்.

இதனால் தனியாக இருந்த மணிமேகலை கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு " நான் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து ெகாள்ளப்போகிறேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் மணிமேகலை உடலில் தீவைத்துக்கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவகுமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தீயில் கருகிய நிலையில் மணிமேகலை கிடந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை நேற்று இறந்துவிட்டார்.இது குறித்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story