பென்னாகரம் பேரூராட்சியில் முள்ளுவாடி ஏரி ரூ.1¾ கோடியில் சீரமைப்பு
பென்னாகரம்:
பென்னாகரம் பேரூராட்சி 12-வது வார்டில் உள்ள முள்ளுவாடி ஏரியை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமிபூஜை பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் கீதா முன்னிலை வகித்தார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். இதில் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் மடம் முருகேசன், சபரிநாதன். மாவட்ட பொறுப்பு குழு முன்னாள் உறுப்பினர் காளியப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் செல்வராஜ், மாது, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன், பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி சிவகுமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.