ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்
ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என ராணிப்பேட்டையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதில் அனைத்துத்துறை அதிகாரள் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். புன்னை சுகாதார நிலையத்தை தலைமையகமாக மாற்ற வேண்டும். கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் நியமனம் செய்ய வேண்டும். கறியாகுடல் கிராமத்தில் உள்ள ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைத்தற்கு இழப்பீடு, பயிர் காப்பீடு வழங்க வேண்டும். தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூலம் கழிவுகள் அகற்ற தக்க நடவடிகை எடுக்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வடலை, துணை இயக்குனர் விஸ்வநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், வேளாண்மை அலுவலர் த.பாபு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.