பூமிநாத சுவாமி கோவிலில் லட்சதீப வழிபாடு
வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவிலில் லட்சதீப வழிபாடு நடந்தது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
வீரவநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற பூமிநாத சுவாமி, மரகதாம்பிகை அம்பாள் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா சார்பில் லட்சதீப வழிபாடு நடந்தது. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. முன்னிலையில், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கோவில் கல் தூண்கள், வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. சுவாமி-அம்பாளுக்கு, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவலிங்க வடிவில் தீபம் ஏற்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த விழாவில் வீரவநல்லூர், சேரன்மாதேவி, முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Related Tags :
Next Story