விழுப்புரத்தில் கொலை செய்யப்பட்டபல்பொருள் அங்காடி ஊழியர் குடும்பத்திற்கு நிதியுதவி
விழுப்புரத்தில் கொலை செய்யப்பட்டபல்பொருள் அங்காடி ஊழியர் குடும்பத்திற்கு நிதியுதவியை லட்சுமணன் எம்எல்ஏ வழங்கினார்.
விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹிம் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் எம்.ஜி.சாலையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இவரது மறைவையொட்டி அவரது வீட்டிற்கு விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில மருத்துவ அணி இணைச்செயலாளருமான டாக்டர் இரா.லட்சுமணன், நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். அப்போது அரசுக்கு பரிந்துரை செய்து உரிய இழப்பீடு கிடைக்க ஆவன செய்வதாக இப்ராகிம் ராஜா குடும்பத்தினரிடம் கூறினார். அப்போது நகர செயலாளர் சக்கரை, மாவட்ட பிரதிநிதிகள் ஜமாலுதீன், பாபு, த.மு.மு.க. முஸ்தாக், தி.மு.க. நகர துணை செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முகமது அலி, நகரமன்ற கவுன்சிலர்கள் அன்சர்அலி, பத்மநாபன், வார்டு செயலாளர்கள் ஜானி, கோவிந்தராஜ், மாதவராஜா, நகர மாணவர் அணி துணை அமைப்பாளர் அசாருதீன், பிரதிநிதிகள் ரஹ்மத்துல்லா, ரபீ, சையது அபுதாஹிர் மற்றும் பலர் உடனிருந்தனர்.