லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.37 லட்சத்து 22 ஆயிரம்


லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.37 லட்சத்து 22 ஆயிரம்
x

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.37 லட்சத்து 22 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் லட்சுமி நரசிம்மசாமி கோவில் வளாகத்தில், யோக நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள 15-க்கும் மேற்பட்ட உண்டியலில் பக்தர்கள்செலுத்திய காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் ரூ.37லட்சத்து 22 ஆயிரம் ரொக்கம், 93 கிராம் தங்கம், 460 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. காணிக்கை பணம் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Next Story