லாலாபேட்டையில் கடை அடைத்து ஆர்ப்பாட்டம்


லாலாபேட்டையில் கடை அடைத்து ஆர்ப்பாட்டம்
x

காஞ்சகிரி கோவிலை நிர்வகிப்பது தொடர்பான பிரச்சினையில்நேற்று லாலாப்ட்டையில்கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

கடையடைப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா லாலாப்பேட்டை அருகே உள்ள முகுந்தராயபுரம் ஊராட்சி எல்லையில் காஞ்சகிரி கோவில் உள்ளது. இந்த கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக முகுந்தராயபுரம் ஊராட்சி, லாலாப்பேட்டை ஊராட்சி நிர்வாகிகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவிலை முகுந்தராயபுரம் ஊராட்சி நிர்வாகிகள் நிர்வகிப்பதாக கிடைத்த தகவலின்பேரில் லாலாப்பேட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடையடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அனுமதியில்லை

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கடை அடைப்பதற்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி பெறவில்லை. எனவே இங்கிருந்து உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தால் லாலாபேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சகிரி கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த நிர்வாகிகள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Next Story