இலம்பி தோல் கழலை நோய் தாக்கிய மாடுகளுக்கு கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை: கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்


இலம்பி தோல் கழலை நோய் தாக்கிய  மாடுகளுக்கு கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை:  கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இலம்பி தோல் கழலை நோய் தாக்கிய மாடுகளுக்கு கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இலம்பி தோல் கழலை நோய் தாக்கிய மாடுகளுக்கு கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலம்பி தோல் கழலைநோய்

மாடுகளில் இலம்பி தோல் கழலைநோய் என்பது ஈ, கொசு போன்ற ரத்தம் உறிஞ்சு பூச்சிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், உடல் சோர்வு, தீவனம் உட்கொள்ளாமை, உடலின் அனைத்து பகுதிகளிலும் கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

பாதிக்கப்பட்டமாடுகளில் இருந்தும், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து புதிதாக மாடுகள் வாங்கி வருவதன் மூலமாகவும் நல்ல ஆரோக்கியமான மாடுகளுக்கு நோய் பரவுகிறது.

கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை

இதனால் பால் உற்பத்தி குறையும், சினைபிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும். தீவனம் சரியாக உட்கொள்ளாததால் உடல் எடை குறைந்து காணப்படும், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில மாடுகளில் மடிநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

மேற்கூறிய நோய் அறிகுறிகள் கால்நடைகளில் தென்பட்டால் அருகில உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சிகிச்சை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story