பாப்பிரெட்டிப்பட்டி அருகே நீதிமன்றம் கட்ட இடம் தேர்வு
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றமங்கள் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் சார்பு நீதிமன்றங்களும் உள்ளன. இவை அனைத்தும் தனியார் கட்டிடங்களில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இதனால் இந்த நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு கரடு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை நேற்று அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், குறுவட்ட நில அளவர் நேசமணி, கிராம நிர்வாக அலுவலர் நித்யா மற்றும் வக்கீல்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story