ரூ.60 லட்சம் மதிப்புள்ள இடம் மீட்பு


ரூ.60 லட்சம் மதிப்புள்ள இடம் மீட்பு
x
திருப்பூர்


உடுமலை நகராட்சியில் பொதுப்பயன்பாட்டுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வந்த நிலையில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான இடத்தை அதிகாரிகள் மீட்டனர்.

ஆக்கிரமிப்பு

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது ஒதுக்கீட்டுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் பல பகுதிகளில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் நகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதன்படி கல்யாணி அம்மாள் லேஅவுட், மகாலட்சுமி நகர், துரைசாமி மனைப் பிரிவு மற்றும் அர்பன் பாங்க் காலனி உள்ளிட்ட இடங்களில் பல கோடி மதிப்பிலான பொதுப் பயன்பாட்டு இடங்கள் நகராட்சியால் மீட்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பழனி சாலைக்கு அருகில் உள்ள கல்யாணி அம்மாள் மனைப் பிரிவு நகர் ஊரமைப்புத்துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு மனைப்பிரிவில் நகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட, திறவிட பயன்பாட்டுக்கென 12 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் 5 கடைகள் கட்டி சுமார் 25 ஆண்டுகளாக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

தொடரும்

இந்த ஆக்கிரமிப்புகள் நேற்று நகராட்சி மற்றும் ஆக்கிரமிப்பாளர்களால் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட 4 சென்ட் இடத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும். மேலும் நகராட்சியால் மனைப்பிரிவில் ஒதுக்கப்பட்ட பொது ஒதுக்கீடுகள் ஒப்படைக்காமல் உள்ளவற்றையும், ஒப்படைக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நகராட்சியால் மீட்கும் நடவடிக்கைகள் தொடரும் என்று நகராட்சித்தலைவர் மு.மத்தீன் தெரிவித்துள்ளார


Next Story