தூத்துக்குடியில் நில புரோக்கர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் நில புரோக்கர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நில புரோக்கர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் நேற்று காலை தூத்துக்குடி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை அமைப்புச் செயலாளர் எஸ்.முருகன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் முத்துராமன், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலையச் செயலாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் நில வழிகாட்டி மதிப்பு, முத்திரைத்தாள் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், சேவைக்கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க, நிர்வாகிகள் எஸ்.சங்கர், மாதவி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story