நிலத்தகராறு; வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு


நிலத்தகராறு; வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு
x

நிலத்தகராறு; வாலிபரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

தோகைமலை அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (50). இவர்கள் 2 பேருக்கும் அதே பகுதியில் அருஅருகே தோட்டங்கள் உள்ளது. இந்த தோட்டங்களுக்கு செல்வதற்கு பொதுபாதை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பொதுபாதையினை பெருமாள் என்பவர் முள்ளை போட்டு அடைத்துள்ளார். இப்படி முள்ளை போட்டு அடைத்தால் எப்படி எனது வயலுக்கு செல்வது என்று பெருமாளிடம், செல்வராஜ் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பெருமாள் தகாதவார்த்தையால் திட்டி, குச்சியால் செல்வராஜை தாக்கினார். இதில் காயம் அடைந்த செல்வராஜ் மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் ெபருமாள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story