சத்தி அருகே நிலத்தகராறு: நாடார் வாழ்வுரிமை சங்கம் சாலை மறியல்


சத்தி அருகே நிலத்தகராறு:  நாடார் வாழ்வுரிமை சங்கம் சாலை மறியல்
x

சத்தி அருகே நிலத்தகராறு

ஈரோடு

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட பெரியகுளம் பகுதியில் நிலத்தகராறு சம்பந்தமாக இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுசம்பந்தமாக நாடார் வாழ்வுரிமை சங்கத்தினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், சத்தியமங்கலம் தாசில்தார் வெங்கடேஸ்வரன் (பொறுப்பு) பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறும்போது, 'குறிப்பிட்ட அந்த நிலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும்' என்றனர். இதை ஏற்றுக்கொண்டு சாலை மறியலை கைவிட்டு் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story