ஆள் மாறாட்டம் செய்து நில மோசடி; 4 பேர் கைது


ஆள் மாறாட்டம் செய்து நில மோசடி; 4 பேர் கைது
x

தென்காசி அருகே ஆள் மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்ட 4 பேைர போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

தென்காசி:

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான 3.67 ஏக்கர் நிலத்தை சிலர் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆதார் அட்டைகள் மற்றும் ஆவணங்களை தயார் செய்து போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.

அதன்படி தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்தி செல்வி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, இந்த நிலமோசடியில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம் கூனியூர் திருவள்ளுவர் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 58), போலியாக ஆதார் அட்டைகளை தயார் செய்த கல்லிடைக்குறிச்சி ரெயில்வே லைன் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் (42), அம்பேத்கர் நகர் 6-வது தெருவை சேர்ந்த சுதந்திர நாதன் (75), இதற்கு மூளையாக செயல்பட்ட தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனி 4-வது தெருவைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் மகாராஜன் (37) ஆகியோரை கைது செய்தனர். இதுபோன்று ஆள்மாறாட்டம் செய்து மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மக்கள் குறை தீர்க்கும் செல்போன் 9385678039 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.


Next Story