கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி


கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி
x
தினத்தந்தி 27 Jun 2022 7:55 PM IST (Updated: 27 Jun 2022 7:56 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். கூடுதல் தாசில்தார்கள் வேதையன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை சர்வேயர் முருகானந்தம் நில அளவை குறித்துபயிற்சி அளித்தார். இதில் 67 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை வேதாரண்யம்கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story