ஏமப்பள்ளியில்அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நில அளவீடு பணி


ஏமப்பள்ளியில்அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நில அளவீடு பணி
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளக்கப்பட்டு நில அளவை கற்கள் நடப்பட்டு வருகின்றன. அதன்படி ஏமப்பள்ளி கிராமத்தில் 0.47 ஏக்கர் நிலம், 4.20 ஏக்கர் நிலம் என மொத்தம் 4.67 ஏக்கர் நிலங்கள் உதவி ஆணையர் ரமணி காந்தன், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, உறுப்பினர் பிரபாகரன், இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் சுந்தரவள்ளி, துணை தாசில்தார் குப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலையில் கோவில் நிலங்கள் அளவீடு செய்து அளவை கற்கள் நடப்பட்டன.


Next Story