கோவில் நிலங்கள் நவீன முறையில் அளவீடு


கோவில் நிலங்கள் நவீன முறையில் அளவீடு
x

கோவில் நிலங்கள் நவீன முறையில் அளவீடு செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை பேராவூரணி வட்டம் ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்த நிலையில், நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் உள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை உரிமம் பெற்ற சர்வேயர்களைக் கொண்டு, ரோவர் மிஷின் மூலம் நவீன முறையில் அளவிடும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா, கோவில் நிலங்கள் தனி தாசில்தார் சங்கர், இந்து சமய அறநிலையத்துறை பேராவூரணி சரக ஆய்வாளர் அமுதா ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, கோவில் செயல் அலுவலர் தனலெட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story