நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றியத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிக்குமார் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, காடாம்புலியூர் குறுவட்ட அளவர் மகேஷ்வரனை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து தாக்கியவரை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன், சிறப்பு மகளிர் குழு உறுப்பினர் ராஜலட்சுமி, புல உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.Next Story