நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கவுரி சங்கர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சக்திவேல், இணைச்செயலாளர் நவமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுசெயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
நில அளவை கள அலுவலர்களின் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் வரை நடவடிக்கை எடுத்து வரும் நில அளவை, நில வரி திட்ட இயக்குனரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு பட்டை அணிந்து, கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கோட்ட தலைவர்கள் முத்துராஜ், சந்திரகுமார், பொருளாளர் கண்ணபிரான், துணைத்தலைவர் சேதுமாதவன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.