பந்தலூர் பகுதியில் பலத்த மழையால் மண் சரிவு


பந்தலூர் பகுதியில் பலத்த மழையால் மண் சரிவு
x

பந்தலூர் பகுதியில் பலத்த மழையால் மண் சரிவு ஏற்பட்டது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் பகுதியில் பலத்த மழையால் மண் சரிவு ஏற்பட்டது.

பலத்த மழை

பந்தலூர், மேங்கோரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, நெலாக்கோட்டை கரியசோலை, பிதிர்காடு, அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, எருமாடு, தாளூர், சேரம்பாடி, சேரங்கோடு உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகளிலும் கால்வாய்களிலும் மழைவெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. தற்போது பந்தலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலை உடைந்து பாதாள குழியாக காட்சி அளிக்கிறது.

மண் சரிவு

இதனால் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்படுகிறது, பந்தலூர் பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் உப்பட்டி பகுதியிலும் கனமழை பெய்தது. இதன்காரணமாக உப்பட்டி அருகே மேஸ்திரி குன்னுவில் குடியிருக்கும் ஆனந்த் என்பவரின் வீட்டின் முன்பு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வீட்டின் தடுப்புச்சுவரும் மண்ணில் புதைந்தது. அப்போது வீ்ட்டில் இருந்த அனைவரும் அங்கிருந்து வெளியேறி உயிர்தப்பினார்கள். தற்போது அந்த வீடு அந்தரத்தில் தொங்குகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலை ஏற்பட்டு உள்ளது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தை தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.


Next Story