பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் மண் சரிவு: 2-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் 2-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்
பழனி, கொடைக்கானல் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று சவரிக்காடு அருகே 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பழனி-கொடைக்கானல் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சீரமைப்பு பணி நேற்றும் நடைபெற்றதால் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே பழனியில் உள்ள கொடைக்கானல் சாலை பிரிவு பகுதியில் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையை வைத்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு வழியே கொடைக்கானலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story