தூத்துக்குடியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு


தூத்துக்குடியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு
x

தூத்துக்குடிகலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றனர். தொடர்ந்து குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு வாகனத்தையும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியையும், குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்று தூத்துக்குடி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் சுரேஷ் ரூபன் பொன்னையா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.


Next Story