நெல்லிக்குப்பம்பூலோகநாதர் கோவிலில் விளக்கு பூஜை
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.
கடலூர்
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூலோகநாதர் கோவிலில், பங்குனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, பூலோகநாதர், புவனாம்பிகை தாயார் மற்றும் முருகனுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்பட 27 விதமான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் மாங்கல்ய பொருட்களுடன் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி பிரபோ, முருகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story