20 அடி ஆழ கிணற்றில் விழுந்த டிப்பர் லாரி


20 அடி ஆழ கிணற்றில் விழுந்த டிப்பர் லாரி
x

பாலக்கோடு அருகே 20 அடி ஆழ புதர் மண்டிய கிணற்றில் டிப்பர் லாரியுடன் விழுந்த டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே 20 அடி ஆழ புதர் மண்டிய கிணற்றில் டிப்பர் லாரியுடன் விழுந்த டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

கிணற்றில் விழுந்த லாரி

பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). லாரி டிரைவர். நேற்று இவர் கரகதஅள்ளியில் உள்ள விவசாய நிலத்திற்கு டிப்பர் லாரியில் மண் ஏற்றிக்கொண்டு வந்தார். மண்னை கொட்டி விட்டு பின் நோக்கி வந்தார்.

அப்போது, அங்கு முட்புதர் மண்டி இருந்த 20 அடி ஆழ பாழடைந்த கிணற்றில் டிப்பர் லாரியுடன் அவர் விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் டிப்பர் லாரியுடன் விழுந்த ராதாகிருஷ்ணனை பொக்லைன் எந்திரம் உதவியுடன் உயிருடன் மீட்டனர்.

சிகிச்சை

பின்னர் அவரை பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் தீயணைப்பு படையினர் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து லாரியை தீயணைப்பு படையினர் கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் லாரியுடன் டிரைவர் விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story