லாரி மோதி விவசாயி பலி
சேத்துப்பட்டு அருகே பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தபோது லாரி மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 60), விவசாயி.
இவருடைய அண்ணன் மகள் சேத்துப்பட்டு அருகே கணகம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை பார்க்க சேகர் நேற்று சென்றார். இரவு தங்கி இன்று காலை 7 மணி அளவில் அவலூர்பேட்டை செல்வதற்கு ராந்தம் கூட் ரோடு அருகே பஸ்சுக்காக காத்து கொண்டு இருந்தார்.
அப்போது ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.