லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு


லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
x

திருமங்கலம் அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரி கிராமத்தை சேர்ந்தவர் பரமானந்தம் மகன் சதீஷ்குமார் (வயது 24). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் வழியாக ஆலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ்சென்ற லாரி, சதீஷ்குமார் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story