தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: முதன்மை கல்வி அலுவலகத்தில் குவிந்தவர்களால் பரபரப்பு


தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: முதன்மை கல்வி அலுவலகத்தில் குவிந்தவர்களால் பரபரப்பு
x

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என்பதால் முதன்மை கல்வி அலுவலகத்தில் குவிந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

தற்காலிக ஆசிரியர் பணி

தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 193 இடைநிலை, 130 பட்டதாரி, 43 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 366 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களாக தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்தனர்.

பரபரப்பு

இந்த பணிக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசிநாள் ஆகும். இதனால் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று ஆசிரியர் பட்டம் பெற்ற ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் குவிந்தனர்.

தொடர்ந்து அங்கு ஒட்டப்பட்டு உள்ள காலிப்பணியிட விவரங்களை ஆர்வமுடன் பார்வையிட்டு அங்கேயே அமர்ந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அலுவலர்களிடம் வழங்கினர். ஏராளமானவர்கள் குவிந்ததால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் காலை முதல் மாலை வரை பரபரப்பாக காணப்பட்டது.


Next Story