சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் 2½ மணி நேரம் தாமதம்


சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்   2½ மணி நேரம் தாமதம்
x

சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் 2½ மணி நேரம் தாமதம்

திருப்பூர்

திருப்பூர்

சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் இரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12673) புறப்பட்டது. அரக்கோணம் நோக்கி ரெயில் வந்து கொண்டிருந்தது. திருவள்ளூர் அருகே ரெயிலின் எஸ்.7, எஸ்.8 பெட்டிகள் இணைப்பு கொக்கி பழுதால் தனியே கழன்றது. என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பெட்டிகள் இணைப்பால் ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் இரவு 11 மணிக்கு அரக்கோணம் வர வேண்டிய ரெயில், ஒரு மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக நள்ளிரவு 12.50 மணிக்கு வந்து சேர்ந்தது. வழக்கமாக தினமும் காலை 4.35 மணிக்கு திருப்பூர் வரும் ரெயில் நேற்று 2½ மணி நேரம் தாமதமாக காலை 7.15 க்கு திருப்பூர் வந்தது. காலை 6 மணிக்கு பதில் 8.15 க்கு கோவை சென்று சேர்ந்தது.

இதனால் சென்னையில் இருந்து திருப்பூர் வந்த ரெயில் பணிகள் தாமதமாக வந்து சேர்ந்தனர்.

----


Next Story