மன உளைச்சலை தவிர்க்க தூய்மை பணியாளர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி
நாகர்கோவிலில் மன உளைச்சலை தவிர்க்க தூய்மை பணியாளர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி நடந்தது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மன உளைச்சலை தவிர்க்க தூய்மை பணியாளர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி நடந்தது.
சிரிப்பு பயிற்சி
நாகர்கோவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் உத்தரவின் பேரில் அவ்வப்போது சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நேற்று ஆசாரிபள்ளம் பொது சுகாதாரப்பிரிவு அலுவலகத்தில் சிரிப்பு யோகா பயிற்சி நடந்தது.
50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த சிரிப்பு யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர். மாநகராட்சி நல அதிகாரி ஜான், சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். சிரிப்பு யோகா பயிற்சியை கண்ணன் அளித்தார்.
Related Tags :
Next Story