விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்


விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்
x

தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர்,

தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது.

பிரசார வாகனம்

ஆண்டுதோறும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பாக குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கையெழுத்து இயக்கம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் அடிப்படையில் நேற்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழியினை அரசு அலுவலர்கள் அனைவரும் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியம் தலைமையில் எடுத்துக்கொண்டனர்.

துண்டு பிரசுரம்

இதனைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தொழிலாளர்நலத் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்த குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் மாவட்ட வருவாய் அதிகாரி மங்களராமசுப்பிரமணியம் தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, தொழிலாளர் நல உதவிஆணையர் காளிதாஸ், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் நாராயணசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story