கோத்தகிரி கிளை நூலகத்தில் 'மெய்நிகர் நூலகத்தளம்' தொடக்கம்


கோத்தகிரி கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகத்தளம் தொடக்கம்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி கிளை நூலகத்தில் ‘மெய்நிகர் நூலகத்தளம்' தொடக்கம்

நீலகிரி

கோத்தகிரி

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை மற்றும் நீலகிரி மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் கோத்தகிரி முழுநேரக் கிளை நூலகத்தில் 'மெய்நிகர் நூலகத்தளம்' என்ற புதிய புதுமையான அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான போஜன் தலைமை வகித்து மெய்நிகர் நூலகத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குண்டாடா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், கடசோலை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சத்யா, நாட்டுப்புற கலைஞர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நூலகர் முருகன் பேசும்போது, இந்த மெய் நிகர் நூலகத் தளத்தின் மூலம், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் எளிதில் கண்டுணர இயலாத வானியல் அறிவியல், ஆழ்கடல், அடர்ந்த காடுகள், அறிவியல் பரிசோதனைகள், உயிரியல், உடல் உறுப்புகள் செயல்பாடுகள், தொல்லியல் முதலான பல பாடங்களை நவீன எந்திரங்கள் மூலம் எளிதில் கண்டு, கேட்டு உணர்ந்து முழுமையாக அறிந்து கொள்ள இயலும் என்றார். இதில் குண்டாடா மற்றும் கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் பழங்குடியினர் மாணவ மாணவிகள், டானிங்டன், பாரதிநகர் குழந்தைகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி மைய குழந்தைகள் என சுமார் 30 மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். இவர்களுக்கு தமிழக அரசால் 2 இலட்சம் ரூபாய் மதிப்பில் நூலகத்திற்கு வழங்கப்பட்ட அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்ப கருவிகளின் செயல் விளக்கம் அளிக்கப்பட்டு, அதனை கண்டு களித்து புதிய அனுபவம் பெற்றனர். இந்த துவக்க விழாவில் நூலக உதவியாளர் கண்ணப்பன், நூலக செய்தித் தொடர்பாளர் கௌரி வரதராஜன், குண்டாடா பள்ளி மேலாண்மை குழு தலைவி யாஜி அம்மு, கவிஞர் நிர்மலா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் சுப்பிரமணி நன்றி கூறினார்.


Next Story