அரசு பள்ளி மாணவிகளுக்கு செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடக்கம்
அரசு பள்ளி மாணவிகளுக்கு செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
கரூர்
கரூர் குழந்தாகவுண்டனூரில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தேவி தொடக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு சேமிப்பின் முக்கியத்தும் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கரூர் அஞ்சல் கோட்ட துணை கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மாமன்ற குழு தலைவர் கோல்ட் ஸ்பாட் ராஜா கலந்து கொண்டு, சிறுசேமிப்பின் முக்கியத்துவத்தை மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறி, பள்ளியில் படித்தும் வரும் 25 மாணவிகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி அதற்கான புத்தகத்தை வழங்கினார். இதில், அஞ்சலக தலைமை அலுவலர் பாபு, பள்ளி நிர்வாகி காமராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story