சலவை தொழிலாளர் சங்க கூட்டம்


சலவை தொழிலாளர் சங்க கூட்டம்
x

நெல்லையில் சலவை தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட சலவை தொழிலாளர் மத்திய சங்க பொதுக்குழு கூட்டம் வண்ணார்பேட்டை ஓட்டலில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். தலைவர் பண்டாரம், பொருளாளர் சண்முகவேல், செயல் தலைவர் மாரியப்பன், ஆலோசகர் வண்ணை கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னையில் நடந்த மாநில மாநாட்டு முடிவின்படி, சலவை தொழிலாளர்களை, ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் சலவை தொழிலாளர்களுக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் சலவை தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு நிலம் ஆர்ஜிதம் செய்து 10 ஆண்டுகள் ஆகியும் பட்டா வழங்கவில்லை. எனவே வண்ணார்பேட்டை, வெள்ளக்கோவில், வீரவநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சலவை தொழிலாளர்களுக்கு வரைமுறைப்படுத்திய நத்தம் பட்டா வழங்க வேண்டும். ஆண்டுக்கு 50 பேருக்கு இஸ்திரி பெட்டி வழங்குவதை, 100 எண்ணிக்கையாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைத்தலைவர் இசக்கி ராஜா நன்றி கூறினார்.


Next Story